27 C
Chennai
Thursday, November 26, 2020

எந்த மாநிலத்திலும் சமஸ்கிருதம், இந்தி கட்டாயப்படுத்தப்படவில்லை – தமிழக பாஜக தலைவர் முருகன்

- Advertisement -
- Advertisement -

சமஸ்கிருதம், இந்தி எந்த மாநிலத்திலும் கட்டாயப்படுத்தப்படவில்லை என்று  தமிழக பாஜக தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,நாட்டின் பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வி முறையில் பெரும் மாற்றத்தை உருவாக்கி இந்தியப் பள்ளிகளின் கல்வியை உலகத் தரத்திற்கு உயர்த்தும், மிகச் சிறந்த புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

புகழ்பெற்ற விஞ்ஞானியும், பத்ம விபூஷன் விருது பெற்றவருமான டாக்டர் கே.கஸ்தூரி ரங்கன் தலைமையிலான “தேசிய கல்வி வரைவுக் கொள்கைக்கான குழு” ஜூன் 2017-ல் அமைக்கப்பட்டது. இக்குழு மே 31-2019 அன்று தங்களது தேசிய வரைவுக் கொள்கையை அளித்தது.

ஏறத்தாழ ஓராண்டு காலம் இணையதளத்திலும், மற்றும் பல்வேறு வழிகளில் ,பொதுமக்கள் உள்ளிட்ட தொடர்புடையவர்களிடமிருந்து அவர்களது பார்வைகள், ஆலோசனைகள், கருத்துகள் பெறப்பட்டன.

இந்தியாவை வலிமையான அறிவாற்றல் மிக்க சமுதாயமாக, உலக அளவில் அறிவாற்றலில் சிறந்த சக்தியாக மாற்றும் நோக்கத்துடன், தேவைக்குரிய மாற்றங்கள் செய்துகொள்ளும் வகையில் ஒவ்வொரு மாணவரின் தனித்தன்மையை, திறமையை வெளிக்கொணரும் வகையில் புதிய கல்விக் கொள்கை 2020 உருவாக்கப்பட்டுள்ளது.

மழலையர் கல்வி முதல் இடைநிலைக் கல்வி வரை அனைத்து மட்டத்திலும், பள்ளிக் கல்விக்கு உலக அளவிலான அணுகுமுறையை புதியக் கல்விக் கொள்கை உறுதி செய்கிறது. உலக அளவில் நம் மாணவர்கள் போட்டி போடுவதற்கு, இப்புதிய கல்விக் கொள்கை அடிப்படையாக அமைவது உறுதி. அறிவு, கற்றல், ஆற்றல் அனைவருக்கும் சொந்தம் என்பதை இக்கொள்கை வலியுறுத்துகிறது.

கல்வியை அழியாத செல்வம் என்பார்கள். ஆனால் அந்தக் கல்வியை அடைய வேண்டும் என்றால், செல்வத்தை இழக்க வேண்டியுள்ளது. ஏழை, பணக்காரர், அரசுப் பள்ளி, தனியார் பள்ளி என மாணவர்கள் கல்வி கற்பதில் உள்ள பாகுபாடுகள், இப்புதிய கல்விக் கொள்கையால் முற்றிலும் மறைந்துவிடும்.

நாடு முழுவதும் சமமான கல்வி கற்பிக்கலாம். குறைந்தபட்சம் 5-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு மற்றும் அதற்கு மேலும் தாய்மொழிக் கல்வி மூலம் பயில்வதன் காரணமாக, பள்ளிக்கு வரும் குழந்தைகள் உற்சாகப்படுத்தும், கற்பதை உணர்ந்தும் கல்வி கற்றிட வழி வகுக்கும். பள்ளிக்குச் செல்லாத ஏறத்தாழ 2 கோடி குழந்தைகள் பள்ளிக் கூடங்களை நோக்கி வருவதற்கு வாய்ப்பை உருவாக்கும் என்று அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.facebook.com/BJP4TamilNadu/posts/3028818573834785

- Advertisement -

Latest news

இணையத்தில் தீயாய் பரவும் நிவர் புயல் பற்றிய கவிதை!

வங்கக்கடலில் உருவான நிவர் புயலை பற்றிய கவிதையை இணையதளவாசிகள் இணையத்தில் அதிகமாக பகிர்நது வருகின்றனர்.  வங்கக்கடலில் உருவான நிவர் புயலானது, 2 நாட்களாக மக்களை அச்சுறுத்தி வந்த நிலையில், நேற்று நள்ளிரவு 11:30  மணி...
- Advertisement -

இன்றைய நாள் எப்படி இருக்கு?? (26/11/2020) ராசி பலன்கள் இதோ.! உங்களுக்காக!

மேஷம்: இன்று உங்கள் மனதில் உணர்ச்சிப்பூர்வமான எண்ணங்கள் ஓடும். உங்களிடம் காணப்படும் பதட்டம் உங்கள் பேச்சில் வெளிப்படும். ரிஷபம்: இன்று முன்னேற்றகரமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகள் எடுக்கலாம். இன்று அமைதியும் திருப்தியும் காணப்படும். மிதுனம்:...

நிவர் அடுத்த மூன்று மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கும்.!

புதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம் பகுதியில் 11.30 முதல் 2.30 மணி வரை அதிதீவிர புயலாக இருந்த நிவர் தீவிர புயலாக வலுவிழந்து முழுவதுமாக கரையை கடந்துள்ளது. தீவிர புயல் புயலாக வலுவிழக்கும் என கூறியிருந்த...

#BREAKING: செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு மீண்டும் அதிகரிப்பு..!

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடியில் நீர்மட்டம் 22.3 அடியாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 7,000 கன அடியிலிருந்து மீண்டும் 9000 கன...

Related news