மீண்டும் டென்னிஸுக்கு திருப்பிய சானியா ..!சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்

  • ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா – நடியா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 
  • 6-4,6-4 என்ற நேர் செட் கணக்கில் சீனாவின் இணையை வீழ்த்தி பட்டத்தை கைப்பற்றியது சானியா ஜோடி.

ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில் நடைபெற்று வருகின்ற ஹோபர்ட் இண்டர்நேஷனல் டென்னிஸ் தொடரில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார் இந்திய வீராங்கனை சானியா மிர்சா.குழந்தை பெற்றெடுத்து விளையாட்டில் இருந்து  நீண்ட ஓய்விற்கு பின்னர் சானியா மிர்சா விளையாடும் முதல் தொடர் இதுவாகும்.

இந்த தொடரில் அரையிறுதிப் போட்டியில் சானியா மிர்சா மற்றும் உக்ரைன் நாட்டின் நடியா கிச்செனோக் உடன் ஜோடி சேர்ந்து ஸ்லோவேனியாவின் ஜிதான்செக், செக் குடியரசின் பவுஸ்கோவா ஜோடியுடன் மோதியது. இந்த போட்டியில் சானியா ஜோடி 7-6 , 6-2 என்ற கணக்கில் எளிதாக வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.இதனால் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் தரவரிசை பட்டியலில் முன்னணியில் இருக்கும் சீனாவின் சங் மற்றும் பெங் ஜோடியை சானியா மிர்சா மற்றும் கிச்செனோக் ஜோடி எதிர்த்து விளையாடியது.பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் சானியா ஜோடி 6-4,6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வெற்றிபெற்றது.சானியா மிர்சா – நடியா ஜோடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.