Sandalwood Diamond

சந்தன பெட்டி.. வைரக்கல்..! அதிபர் ஜோ பைடன், ஜில் பைடனுக்கு சிறப்பு பரிசு வழங்கிய பிரதமர் மோடி.!

By

அதிபர் ஜோ பைடனுக்கு சந்தனப்பெட்டி மற்றும் ஜில் பைடனுக்கு வைரக்கல்லை பரிசாக வழங்கினார் பிரதமர் மோடி.

அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, இன்று வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பைடன் ஆகியோருடன் உடன் சந்தித்து சிறப்பு பரிசுகளை பரிமாறிக்கொண்டார்.

Modi Biden
Modi Biden [Image- Twitter/@narendramodi]

நேற்று நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் மோடி இன்று அதிபரை சந்தித்து அவருக்கு பரிசு வழங்கினார்.

ஜெய்ப்பூரைச் சேர்ந்த தலைசிறந்த கைவினைஞரால் தயாரிக்கப்பட்ட பிரத்யேக சந்தனப் பெட்டியை அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். மைசூரில் இருந்து பெறப்படும் சந்தன மரம் கொண்டு இந்த சந்தன பெட்டி நுட்பமாக செதுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்கு பிரதமர் மோடி பரிசளித்த பெட்டியில் பத்து நன்கொடைகள் உள்ளன. இது தவிர அமெரிக்க முதல் பெண்மணி டாக்டர் ஜில் பைடனுக்கு 7.5 காரட் வைரக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி பரிசாக வழங்கினார். இந்த வைரம் ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட 7.5 காரட் வைரமாகும்.

Dinasuvadu Media @2023