“தங்கத்தை விட மணலின் விலை அதிகமாக இருக்கின்றது”- கே. பாலகிருஷ்ணன்!

தங்கத்தை விட மணலின் விலை அதிகமாக இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியது. அந்தவகையில், மதசார்பற்ற கூட்டணினியின் மதுரை மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் சின்னம்மாள் சின்னசாமி அவர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்பொழுது அவர் பேசுகையில், தமிழகத்தில் தங்கத்தை விட மணலின் விலை அதிகரித்துள்ளதாகவும், வேறு ஆட்சியில் இந்தளவு விலை ஏற்றம் கண்டுள்ளதா? என கேள்வி எழுப்பினார். மேலும், தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளை அரசுதான் நடத்துகிறது என கூறிய அவர், ரூ.540-க்கு விற்கப்படும் மணலை ரூ. 25,000 முதல் 50,000 வரை விற்கப்படுவதாக குற்றம் சாட்டினார்.