அட இப்படி ஒரு ஞாபக சக்தியா…? கின்னஸ் சாதனை படைத்த சென்னை சிறுமி…!

அட இப்படி ஒரு ஞாபக சக்தியா…? கின்னஸ் சாதனை படைத்த சென்னை சிறுமி…!

ஒரே நிமிடத்தில் 68 ஆங்கில எழுத்து வடிவங்களை கூறி சனா ஸ்ரீ கின்னஸ் சாதனை  படைத்துள்ளார்.

சென்னையில் வசிக்கும், கலால் வரித்துறையின் கூடுதல் ஆணையர்  சமய முரளி. இவரது மகள் தான் 8 வயது நிரம்பிய சனாஸ்ரீ. இவர் ஆங்கில எழுத்துக்களின் வெவ்வேறு வடிவங்களை கண்டறிந்து சாதனை படைக்க, நீண்ட நாட்களாக பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி, ஒரே நிமிடத்தில் 68 ஆங்கில எழுத்து வடிவங்களை கூறி சனா ஸ்ரீ கின்னஸ் சாதனை  படைத்துள்ளார். இதுகுறித்து அவரது தாய் பிரவீனா கூறுகையில், கொரோனா ஊரடங்கால் குழந்தைகள் வீட்டிலேயே முடங்கி கிடந்த நிலையில், ஒய்வு நேரங்களை பயனுள்ள வகையில் மாற்றும் நோக்கில் பயிற்சி அளித்ததில் பலனாக, தனது குழந்தை இந்த சாதனையை படைத்ததாக கூறியுள்ளார்.

இதற்க்கு முன்னதாக ஒரு நிமிடத்தில் 37 எழுத்து வடிவங்களை கூறி கின்னஸ் சாதனை படைத்திருந்தனர். இந்த சாதனையை சனா ஸ்ரீ முறியடித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube