அருண் விஜய்க்கு அண்ணனாக களமிறங்கிய சமுத்திரகனி.! அப்பா பிரகாஷ்ராஜ்.!

AV33 திரைப்படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு பதிலாக இணைந்தார் நடிகர் சமுத்திரகனி.

நடிகர் அருண் விஜய் – இயக்குனர் ஹரி கூட்டணியில் உருவாகி வரும் படம் AV33. படத்திற்க்கு இன்னும் பெயரிடபடவில்லை. இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். ராதிகா,யோகி பாபு, புகழ், அம்மு அபிராமி, இமான் அண்ணாச்சி போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.  படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் நடந்தபோது, காயம் ஏற்பட்டு சில நாட்கள் படப்பிடிப்பில் இருந்து நடிகர் அருண் விஜய் விலகி இருந்தார். தற்போது காயம் சரியாகி மீண்டும் படப்பிடிப்பில் கொண்டுள்ளார். விறு விறுவென முழுவீச்சில் படத்தின் படப்பிடிப்பு பழனியில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இப்படத்தில் பிரகாஷ் ராஜ் அருண் விஜய்க்கு அண்ணனாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். சமீபத்தில் நடிகர் பிரகாஷ் ராஜிற்கு ஏற்பட்ட விபத்தின் போது, தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து பிரகாஷ் ராஜ் இயக்குனர் ஹரியை தொடர்ப்பு கொண்டு படத்திலிருந்து விலகுவதாக கூறியுள்ளார். அதன் பின் தற்போது பிரகாஷ் ராஜ்க்கு பதிலாக நடிகர் சமுத்திரக்கனி நடித்து வருகிறார். அருண் விஜய் – இயக்குனர் ஹரியுடன் சமுத்திரக்கனி இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.