ராதிகா நடிக்கும் புதிய சீரியலை இயக்க உள்ளாரா சமுத்திரக்கனி?! உண்மை தகவல் இதோ!

நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி, நடிகை ராதிகாவை முன்னணி வேடத்தில் வைத்து, ஒரு சீரியல் இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியானது. அவர் தற்போது நாடோடிகள் 2, அடுத்த சாட்டை, இந்தியன் 2, ராஜமௌலியின் RRR, அல்லு அர்ஜுன் படம் என பிசியாக நடித்து வருகிறர்.

இந்நிலையில் ராதிகா நடிக்கும் சீரியலை எப்படி இயக்குவார் என கேட்கையில், சமுத்திரக்கனி முழு சீரியலையும் இயக்கவில்லையாம். ராதிகா நடிக்கும் புதிய சீரியலின் ட்ரெய்லர் மட்டும் ஷூட் செய்து கொடுத்துள்ளாராம். மேலும் கதை விவாதத்தில் கலந்து கொண்டாராம்.

இதற்க்கு முக்கிய காரணம் ராதிகா நடித்து, சன் டிவியில் ஒளிபரப்பான அரசி சீரியலை சமுத்திரக்கனிதான் இயக்கி இருந்தாராம். ஆதலால் தான் வளர்ந்த இடம் இதுதான், எனவே அதனை நான் மறக்க மாட்டேன் ராடன் கம்பெனியில் இருந்து, எப்போது அழைத்தாலும் கண்டிப்பாக செல்வேன் எனவும் தெரிவித்துள்ளாராம்.