sameera reddy

Sameera Reddy : தெலுங்கு படத்திற்கு காசு வாங்கி தமிழில் பிளாக் பஸ்டர் படத்தை தவறவிட்ட சமீரா ரெட்டி!

By

தமிழ் சினிமாவில் வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி . இவர் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகம் ஆவதற்கு முன்பே ஹிந்தி, பெங்காலி உள்ளிட்ட சில மொழிகளில் உருவாகும் படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் வாரணம் ஆயிரம் தான் முதல் திரைப்படம். ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்தது போல தமிழ் சினிமாவிலும் முன்னணி நடிகையாக ஆவதற்கான எல்லா வாய்ப்பும் இருந்தது என்றே கூறலாம்.

ஆனால், சரியான கதையம்சம் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்து நடிக்காத காரணத்தால் அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் வரவில்லை என்றே கூறலாம். குறிப்பாக ஒரு சில பெரிய தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பையும் அவர் தவறவிட்டாராம். அந்த படம் எதுவென்றால் அஜித் நடிப்பில் வெளியான சிட்டிசன் படம் தானம்.

சிட்டிசன் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக வசுந்தரா தாஸ் நடித்திருப்பார். அந்த கதாபாத்திரத்தில் முதன் முதலாக நடிக்க இருந்தது நடிகை சமீரா ரெட்டி தானம். ஆனால், சிட்டிசன் பட வாய்ப்பு வந்த சமயத்தில் சமீரா ரெட்டி தெலுங்கு படத்தில் சிறிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க சம்பளம் வாங்கினாராம். முழுவதுமாக சம்பளம் வாங்காமல் அட்வான்ஸ் தொகையை வாங்கிய காரணத்தால் அவர் தெலுங்கு படத்தில் நடித்தாராம்.

இதனால் சிட்டிசன் படத்தில் நடிக்கமுடியாமல் போனதாம். பிறகு சிட்டிசன் படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆனதை பார்த்துவிட்டு நாம் நடித்திருக்கலாம் என வருத்தமும் பட்டாராம். சமீரா ரெட்டி சிறிய கதாபாத்திரத்தில் நடித்த அந்த தெலுங்கு படமும் பெரிய அளவில் வெற்றியை பெறவில்லையாம். இதனால் மிகவும் மன வருத்தம் அடைந்த சமீரா ரெட்டி அப்டியே தெலுங்கு, ஹிந்தி சினிமா பக்கம் சென்றுவிட்டதாகவும் பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நடிகை சமீரா ரெட்டி தமிழில் விஷாலுக்கு ஜோடியாக வெடி மற்றும் வேட்டை ஆகிய படங்களில் நடித்திருந்தார். அந்த படங்களுக்கு பிறகு தமிழில் எந்த படத்திலும் அவர் நடிக்கவில்லை. பிறகு அப்டியே தன்னுடைய குழந்தைகளை பார்த்துக்கொள்வதற்காக சினிமாவை விட்டு விலகிவிட்டார். 44 வயதான நடிகை சமீரா அடிக்கடி கவர்ச்சியாக புகைப்படங்களையும் தனது சமூகவலைத்தளங்களில் வெளியீட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.