சேலம் மாவட்ட மருத்துவமனைகளில் பல்வேறு காலிப்பணியிடங்கள்.. 8ஆம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்களுக்கு வாய்ப்பு.!

By

selam medical jobs

சேலம் மாவட்ட மருத்துவமனைகளில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சேலம் மாவட்ட அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் பணியமர்த்த அறிவிப்பாணை வெளியாகியுள்ளது. இந்த ஊழியர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே என்றும் , நிரந்தர பணியாக மாற்றப்படாது என்றும் அறிவிப்பில் முக்கிய குறிப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்மருத்துவர் முதல் பொது உதவியாளர், பொது சுகாதார பணியாளர்கள் என பல்வேறு பணிகளுக்கு 8 ஆம் வகுப்பு முதல் இளங்கலை மருத்துவ படிப்பு படித்தவர்கள் வரையில் அந்தந்த பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலிப்பணிகள் :

பல் மருத்துவர், கணினி பயன்பாட்டாளர், டிரைவர், பல் மருத்துவ உதவியாளர், ஆய்வக உதவியாளர், பொது உதவியாளர், தூய்மை பணியாளர் என 14 வகையான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

காலியிடங்கள் :

பல் மருத்துவர் (7) , கணினி பயன்பாட்டாளர் (3), டிரைவர் (1), பல் மருத்துவ உதவியாளர் (3), ஆய்வக உதவியாளர் (1), பொது உதவியாளர் (14), தூய்மை பணியாளர் (1) என 14 வகையான காலிப்பணியிடங்களுக்கு 44 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கல்வித்தகுதி :

8ஆம் வகுப்பு தகுதி முதல் இளங்கலை பல் மருத்துவம் வரை அந்தந்த பணிகளுக்கு தேவையான படிப்பை முடித்து இருக்க வேண்டும்.

சம்பளம் விவரம் (மாத அடிப்படையில்) :

  • ரூ.8,500/- முதல் 34,000/- வரை. (பணிக்கேற்ற ஊதியம்)

வயது வரம்பு (அதிகபட்சம்): 

லேப் டெக்னீசியன் – கிரேடு III :

  • குறைந்த பட்சம் 18 – அதிகபட்சம் 40 (பொது உதவியாளர்களுக்கு மட்டும்)
  • குறைந்த பட்சம் 24 – அதிகபட்சம் 40 (மற்ற பணிகளுக்கு)

தேர்வு செய்யப்படும் முறை : 

  • விண்ணப்பங்கள் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் நேர்காணல் மூலம் பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி – 25 ஜூன் 2023, மாலை 6 மணி.

விண்ணப்பிக்கும் முறை : 

  • மாவட்டத்தில் உள்ள சுகாதார துணை இயக்குனர் அலுவலகம், சுகாதர நிலையங்களில் விண்ணப்பங்களை பெற்று கொள்ள வேண்டும்.
  • அதனை நிரப்பி உரிய ஆவண நகல்களோடு கீழ்கண்ட முகவரிக்கு 25 ஜூன் 2023, மலை 5 மணிக்குள் வந்து சேரும்பப்படி தபால் மூலம் விண்ணப்பங்களை அனுப்பி வேண்டும்.

நிர்வாக செயலாளர் /துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம், சேலம் ( Distrit Health Society, Salem) துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், பழைய நாட்டாண்மை கழக கட்டிட வளாகம், சேலம்- 636 001.