தேர்தலில் சொத்து பட்டியல் மறைப்பு புகாரின் பெயரில் எடப்பாடி பழனிசாமிக்கு சேலம் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு விசாரணையை மேற்கொள்ள உள்ளனர்.
கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலின் போது எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சொத்துப்பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் வேட்பாளர் மனுவில் குறிப்பிட்டு சமர்ப்பித்தார்.
அந்த தகவல் உண்மையில்லை என்றும், எடப்பாடி பழனிசாமி தனது சொத்துக்களை மறைத்துவிட்டார் என்றும் சேலம் நீதிமன்றத்தில் மிலானி என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கின் கீழ் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்து இருந்தனர்.
இந்நிநிலையில், பதியப்பட்ட வழக்கின் கீழ் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தொடங்க உள்ளனர். இதற்ககாக விசாரணைக்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் புகார்தாரர்ர் மிலானி நேரில் வரவேண்டும் என சம்மன் அனுப்ப காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.