டாக்டர் தொழிலுக்கு குட் பாய் … நடிப்புக்கு முன்னுரிமை … பிரேமம் புகழ் சாய்பல்லவி குறித்த புதிய தகவல்….

கேரள நடிகை சாய்பல்லவி சமிபத்தில் வெளியான பிரேமம் என்ற மலையாளப் படத்தின் மூலம் ஒட்டுமொத்த கேரள சினிமா மற்றும் தமிழக சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா  இடம் பிடித்துவிட்டார் என்று கூறினால் அது மிகையாகாது. அதன்பின்  அவர்  நடித்த சில படங்கள் வெற்றிப் பெறாவிட்டாலும் அவருக்கான  மவுசு  இன்னும் தமிழக மற்றும் கேரள சினிமாவில்  தற்போது வரை குறையாமல் உள்ளது.தற்போது சாய் பல்லவி நடிப்பில் என்.ஜ.கே படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.வரும்  மே மாதம் 31 ஆம் தேதி இந்தப் படம் வெளியாவதை அடுத்து படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகள் தற்போது  நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன.

Image result for sai pallavi

சமீபத்தில் பிரபல நேர்காணல் ஒன்றில் சாய்பல்லவியிடம் அவர் படித்து வந்த  மருத்துவப் படிப்பை தொடர முடியாமல் போனது குறித்துக் கேள்வி எழுப்பினர்,அதற்கு அவர் தெரிவித்ததாவது ,‘நான்  தற்போது  பயிற்ச்சி செய்ய மருத்துவமனைகளுக்கு செல்வதில்லை. என்னிடம் இருந்த சில திறமைகள் என்னை விட்டு மறைந்து போவதை என்னால் உணர முடிகிறது.நான்  மருத்துவமனைக்கு  இப்போது சென்றால் என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்கின்றனர். ஆனால் யாரும் நான் எழுதி தரும் மருந்து சிட்டை  வாங்கமாட்டார்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.இந்த தகவல் ரசிகர்களிடம் நகைச்சுவை கலந்த அனுதாபத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

author avatar
Kaliraj

Leave a Comment