இந்துக்களின் உணர்வை காயப்படுத்திய சதக் - 2 போஸ்ட்ர்.? முகேஷ் பட், மகேஷ் பட், ஆலியா பட் மீது வழக்கு பதிவு.!

இந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்தும்படி சதக் 2 போஸ்ட்ர் இருந்ததை

By ragi | Published: Jul 11, 2020 12:01 PM

இந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்தும்படி சதக் 2 போஸ்ட்ர் இருந்ததை அடுத்து மகேஷ் பட், முகேஷ் பட் மற்றும் ஆலியா பட் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மகேஷ் பட் இயக்கி முகேஷ் பட்டுடன் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் 'சடக் 2'. இந்த படத்தில் பூஜா பட், ஆலியா பட், ஆதித்யா ராய் கபூர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கவுள்ளனர். இந்த படத்தின் போஸ்ட்ர் ஒன்று வெளியாகியதை அடுத்து இந்துக்களை அவமரியாதை செய்வதாக கூறி முகேஷ் பட், மகேஷ் பட் மற்றும் ஆலியா பட் மீது வழக்கு பதிவு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள வக்கீல் வினய் பாண்டே ஐபிசி பிரிவுகளான வேண்டுமென்றே மத உணர்வுகளை மீறுவதால் 295ஏ - ன் கீழும், கிரிமினல் சதி என்பதால் 120பி-ன் கீழும் வழக்கு பதிவு செய்து மனு தாக்கல் செய்துள்ளார். அதில், சதக்2 படத்தின் போஸ்டரில் கைலாஷ் மன்சரோவரர் மலையை பயன்படுத்தியுள்ளனர். அந்த மலை பகவான் ஷங்கரின் தங்கமிடமாகும்.

புனிதமான மலையை பயன்படுத்தி இந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்தியுள்ளனர். எனவே முகேஷ் பட், மகேஷ் பட் மற்றும் ஆலியா பட் ஆகியோரின் ஐபிசி பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டான சவுரப் பாண்டே செப்டம்பர் 8ம் தேதி விசாரணைக்கு வரும் என்று அறிவித்துள்ளார்.

Step2: Place in ads Display sections

unicc