சச்சின் பைலட் அடுத்த நகர்வு 3 மணிக்கு விசாரிக்கிறது ராஜஸ்தான் உயர் நீதிமன்றம்

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான, காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது.மாநில காங்கிரஸ் தலைவராகவும் துணை முதல்வராகவும் இருந்து வந்த சச்சின் பைலட், முதல்வர் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி துாக்கினார்.மேலும் தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன் டில்லியில் முகாமிட்டு உள்ளார்.

பதவி பறிப்பு :

இந்நிலையில் நேற்று முன்தினம் முதல்வர் கெலாட், காங் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை திடீரென்று ஜெய்ப்பூரில் உள்ள தனது வீட்டிலேயே கூட்டினார்.ஆலோசனை கூட்டத்தில் எம்.எல்.ஏக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று கட்சியின் கொறடா மகேஷ் ஜோஷி உத்தரவிட்டு இருந்தார் ஆனால், சச்சின் பைலட் மற்றும் அவருடைய ஆதரவு 2 அமைச்சர்கள் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை புறக்கணித்தனர்.

இதனைத் தொடர்ந்து துணை முதல்வர் பதவியிலிருந்தும், மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்தும் சச்சின் பைலட் உடனடியாக நீக்கப்பட்டார்.மேலும் அமைச்சர் பதவியிலிருந்து, விஸ்வேந்திர சிங், ரமேஷ் மீனா ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டனர்.

எதிர்த்து வழக்கு :

இந்நிலையில் சபாநாயகர் சி.பி. ஜோஷியின் தகுதிநீக்க நோட்டீஸுக்கு எதிராக சச்சின் பைலட் மற்றும் அவரது 18 ஆதரவாளர்கள் எம்.எல்.ஏ.  க்கள் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர் .இந்த வழக்கனது இன்று பிற்பகல் 3 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.

துணை முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட  சச்சின் பைலட் அவரது ஆதரவு 18 எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்வது பற்றி விளக்கம் கேட்டு ராஜஸ்தான் சட்டசபை சபாநாயர் சி.பி.ஜோஷி, ‘நோட்டீஸ்’ செய்வாய்க்கிழமை அனுப்பியிருந்தார். இந்த அறிவிப்புகளுக்கு வெள்ளிக்கிழமைக்குள் பதிலளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகின .இந்நிலையில் சச்சின் பைலட் மற்றும் அவரது 18 ஆதரவாளர்கள் எம்.எல்.ஏ.  க்கள் தொடர்ந்துள்ள இந்த வழக்கு ராஜஸ்தான் அரசியலில் அனல் பறக்க தொடங்கியுள்ளது.

author avatar
Castro Murugan