சச்சின் மாநிலங்களவை பதவி செயல்பாட்டை விமர்ச்சித்த மத்திய இணையமைச்சர்!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்  இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சினுக்கு  ஹால் ஆஃப் ஃ பேம் விருது வழங்கியது.இந்நிலையில் சச்சினுக்கு வாழ்த்து தெரிவித்த மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் பாபுல் சுப்ரியோ தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில்  ஹால் ஆஃப் ஃ பேம் பட்டியலில் சச்சின் இடம் பெற்றதற்கு எனது மனமார்ந்த நன்றிகள் உங்கள் சாதனைகள் பல விளையாட்டு வீரர்களுக்கு  ஒரு  முன் உதாரணமாகும்.

மேலும் இதே போல மாநிலங்களவை பதவிக் காலத்தில் நீங்கள் விவாதங்களில் பங்கேற்று இருந்தால் அந்தப் பதவியும் சிறப்பாக இருந்திருக்கும் என கூறினார் நீங்கள் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய இருந்தால் அந்த உரை இந்தியாவை உற்று நோக்கி இருக்கும் என கூறினார்.

சச்சின் டெண்டுல்கர் 2012-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி முதல் 2018 ஏப்ரல் 26-ஆம் தேதி வரை மாநிலங்களவை எம்பி பதவியில் இருந்தார்.  பதவியில்  இருந்த  அந்த காலகட்டத்தில் குறைந்த நாட்கள் மட்டுமே அவைக்கு  சென்றுள்ளார்.

சச்சின் ஆறு ஆண்டுகளில் 8 சதவீத  நாட்கள் மட்டுமே அவைக்கு  சென்று இருந்தார்.மேலும் அவையில் நடைபெற்ற எந்த விவாதத்திலும்  பங்கேற்கவில்லை இதனால் சச்சின் மீது அதிக  குற்றச்சாற்றுகள் எழுந்தன.

இந்நிலையில் மத்திய இணையமைச்சர்  பாபுல் மறைமுகமாக சச்சின் மாநிலங்களவை பதவி செயல்பாட்டை விமர்சித்துள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.