உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் அந்த நாள் நெருங்கும் வேலையில்  உலகக்கோப்பை போட்டியில் விளையாட இந்திய அணி விராட் தலைமையில் இங்கிலாந்து புறப்பட்டு சென்றுள்ளது.

Related image

இப்போட்டியானது மே 30 தேதி தொடங்கி ஜூலை 14 தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் இந்திய அணி தொடர்பாக அணியின் பயிற்சியாளர் உள்பட கேப்டன் வரைக்கும் உலககோப்பை பற்றி கருத்துகளை  கூறி விட்ட நிலையில் ரசிகர்கள் அனைவரும் சச்சினின் இந்திய அணி பற்றிய கருத்துகளை கேட்க ஆர்வமாக இருந்தனர்.

Related image

அந்த ஆர்வத்திற்கு பதில் அளிக்கும் வகைளில்  தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய சச்சின் இந்திய அணி உலககோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் உலககோப்பையில் கோலி மட்டுமே ஆட்டத்தை வெளிப்படுத்தினால் போதாது.தனி நபர் ஒருவர் போராடினால்  மட்டும் கோப்பை கிடைத்து விடாது.

Related image

அணியில் உள்ள ஒவ்வோருவரும்  ஆட்டத்தின் சூழலை அறிந்து அதற்கேற்ப ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.இந்திய அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் எங்கு எப்போது இறங்கினாலும் ஆட்டத்தை வெளிபடுத்த தயாராக இருக்க வேண்டும். மேலும் அணியில்  உள்ள அனைவரும் உலககோப்பை போட்டிகளில் ஒத்துழைப்போடு விளையாடுவது மிகவும் அவசியம் என்று கூறியுள்ளார்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here