சாமியார் நித்தியானந்தா.! இருக்குமிடம் இதுவா.?

  • தலைமறைவாக இருக்கும் நித்யானந்தாவை இருப்பிடத்தை கண்டுபிக்க சர்வதேச காவல்துறையான இன்டர்போலிடம் குஜாரத் காவல்த்துறை கோரிக்கை வைத்தது.
  • தலைமறைவாக இருந்து வரும் நித்யானந்தா கியூபா, மெக்சிகோவுக்கு அருகிலுள்ள கரீபியன் தீவில் பதுங்கி இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நித்தியானந்தா மீது கடத்தல் மற்றும் சிறுமிகளை கொடுமைப்படுத்துதல் போன்ற பல்வேறு குற்றங்களில் அவரை போலீசார் தேடி வருகின்றனர். இதன் விளைவாக குஜராத்தில் உள்ள அவரது ஆஸ்ரமம் மூடப்பட்டது. நித்தியானந்தாவிற்கு குஜராத்தில் வழக்கு தொடரப்பட்டு, விசாரணையம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நித்தியானந்தா சார்பாக புதிய பாஸ்போர்ட் கேட்டு விண்ணம் செய்யப்பட்டது. ஆனால் மத்திய அரசு அதனை நிராகரித்தது. சில தினங்களுக்கு முன்னர் கைலாச என்ற தனி நாட்டை உருவாக்குவதாக அறிவித்தது, பெரும் விவாதமாக வெடித்தது. மேலும், பல பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான நித்யானந்தா மீது, கடத்தல் வழக்கும் பதிவு செய்யப்பட்டதால் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற அவர் தலைமறைவானார்.

இந்த வகையில் நித்தியானந்தாவுக்கு எதிராக புளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க சர்வதேச காவல்துறையான இன்டர்போலிடம் குஜாரத் காவல்த்துறை கோரிக்கை வைத்தது. இந்த கோரிக்கையை ஏற்று சர்வதேச காவல்துறை ப்ளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. தலைமறைவாக உள்ள நபரின் இருப்பிடம் குறித்த தகவல்களை கண்டறிய, புளு கார்னர் நோட்டீஸ் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இண்டர்போல் உதவியுடன் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்பேரில் சி.பி.ஐ. மூலம் சர்வதேச போலீசை அணுகிய குஜராத் போலீசார், நித்யானந்தாவை பிடிக்க உதவி கோரியதை தொடர்ந்து அவருக்கு எதிராக புளூ கார்னர் நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் நித்யானந்தா கியூபா, மெக்சிகோவுக்கு அருகிலுள்ள கரீபியன் தீவில் உள்ள குட்டி நாடான பெலிசில் பதுங்கி இருப்பதாகவும், அந்நாட்டு குடிமக்களுக்கு வழங்கப்படும் பாஸ்போர்ட்டை வாங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.