• இட்லிப் நகரின் ஒரு சிறையில்  செவ்வாய் அன்று ரஷ்ய விமானங்கள் குண்டுவீசி நடத்திய தாக்குதலில் 20-க்கும் மேற்பட்ட சிறை கைதிகள் இறந்தனர்.
  •  சிரிய அரசுப் படைகள் மற்றும் ஆதரவாளர்கள் மீது நடத்திய தாக்குதல்களில்  2011-ம்  ஆண்டில் இருந்து 12 ஆயிரத்து 763 பொதுமக்கள் இதுவரை இறந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இட்லிப் மாகாணத்தின் வடமேற்கில் பல  இடங்களில் ரஷ்ய விமானம் நேற்று தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பச்சிளங் குழந்தைகள் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த மனித உரிமை நுண்ணாய்வுக் குழு தெரிவித்துள்ளது.

இட்லிப் நகரின் புறநகர் பகுதியில் ஒரு சிறையில்  செவ்வாய் அன்று ரஷ்ய விமானங்கள் குண்டுவீசி நடத்திய தாக்குதலில் 20-க்கும் மேற்பட்ட சிறை கைதிகள் இறந்தனர் என அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

இட்லிப் பகுதி ஹயாத் தாஹ்ரீர் அல் ஷாம் இயக்கத்தைச் சேர்ந்த ஜிகாதிகளின்  கட்டுப்பாட்டில் உள்ளது.கடந்த மூன்று வாரங்களில் மட்டும் வான்வழித் தாக்குதலில் 600 பேருக்கு மேல் இறந்துள்ளனர்.

மேலும் சிரிய அரசுப் படைகள் மற்றும் ஆதரவாளர்கள் மீது நடத்திய தாக்குதல்களில்  2011-ம்  ஆண்டில் இருந்து 12 ஆயிரத்து 763 பொதுமக்கள் இதுவரை இறந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.