27 C
Chennai
Sunday, October 24, 2021

ஊரக உள்ளாட்சி தேர்தல் – பாஜக வேட்பாளர் வெற்றி.. எங்கே தெரியுமா?

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு செக்காப்பட்டி 1 வது வார்டில் பாஜக வேட்பாளர் பாரதி வெற்றி.

தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் மொத்தமுள்ள 140 மாவட்ட கவுன்சிலர் இடங்களுக்கான தேர்தலில் 16 இடங்களுடன் திமுக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் நிலக்கோட்டை வத்தலக்குண்டு ஒன்றியம் செக்காபட்டி 1வது வார்டு உறுப்பினர் தேர்தலில் பாஜக வத்தலகுண்டு ஒன்றிய கல்வியாளர் பிரிவு தலைவர் பாரதி அதிக ஓட்டு வித்யாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுபோன்று கணவாய்பட்டி 4வது வார்டு உறுப்பினர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மாரியப்பன் வெற்றி பெற்றதாகவும், திருவாரூர் நன்னிலம் விசலூர் 5வது வார்டு ஊராட்சி மன்ற உறுப்பினர் தேர்தலில் ராஜசேகரன், அச்சுமங்கலம் 3வது வார்டு ஊராட்சி மன்ற உறுப்பினர் தேர்தலில் சங்கர் வெற்றி பெற்றுள்ளனர்.

spot_imgspot_img

Hot Topics

Read More