29 C
Chennai
Wednesday, June 7, 2023

கடந்த 4 ஆண்டுகளாக ரோஹித் ஷர்மா சிறப்பாக ஆடியுள்ளார்…விராட் கோலி புகழாரம்.!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இன்று லண்டன் ஓவல்...

தகர்க்கப்பட்ட உக்ரைன் அணை..பெருக்கெடுத்த வெள்ளம்..! அவசரநிலை அறிவிப்பு..!

தெற்கு உக்ரைனில் சோவியத் காலத்து அணை தகர்க்கப்பட்டதால் அணையைச்...

#KarnatakaElectionResults : காங்கிரஸ் வசமாகும் KGF.! பெரும் வித்தியாசத்துடன் ரூபா கலா முன்னிலை.!

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரூபா கலா கோலார் தங்க வயல் பகுதியில் பெரும்பான்மை வித்தியாசத்துடன் முன்னிலை வகித்து வருகிறார். 

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் முன்னிலை நிலவர முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இதில் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உள்ளது ஏறக்குறைய உறுதியாகி கொண்டு இருக்கிறது. பல்வேரு முக்கிய தொகுதிகளில் முன்னணி நிலவரங்கள் வெளியாகி கொண்டு இருக்கின்றன.

இதில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒன்றான கோலார் தங்க வயல் (கே.ஜி.எப்) பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட ரூபா கலா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். பாஜக வேட்பாளர் அஸ்வினி சம்பங்கி தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகின்றார். இதனால் கே.ஜி.எப் தற்போது காங்கிரஸ் வசமாகும் நிலை ஏற்பட்டுள்ள்ளது.