‘ரன் டு தி மூன்’ – உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 14,000 ஓட்டப்பந்தய வீரர்கள் பங்கேற்பு!

‘ரன் டு தி மூன்’ – உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 14,000 ஓட்டப்பந்தய வீரர்கள் பங்கேற்பு!

உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 14,000 ஓட்டப்பந்தய வீரர்கள் பங்கேற்ற ஓட்டப்பந்தயம்.

தேசிய பூப்பந்து பயிற்சியாளர் புல்லேலா கோபிசந்த் மற்றும் அர்ஜுனா விருது பெற்ற அஸ்வினி நச்சப்பா மற்றும் மாலதி ஹோல்லா ஆகியோரின் முயற்சியால், ஓட்டப்பந்தய போட்டி நடைபெற்றது. இந்த போட்டியானது, கோவிட் -19 தொற்றுநோய்க்குப் பின்னர் முடிவெடுப்பதில் சிரமப்பட்டு வரும், நாட்டில் தேவைப்படும் பயிற்சியாளர்கள் மற்றும் விளையாட்டு உதவி ஊழியர்களுக்கான நிதி திரட்டுவதை நோக்கமாகக் கொண்டது.

உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 14,000 ஓட்டப்பந்தய வீரர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். பங்கேற்பாளர்களுக்கு 3,84,400 கிலோமீட்டர் கூட்டு இலக்கு வழங்கப்பட்டது. இந்த இலக்கானது, பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரம் ஆகும். ஜூலை 21 ஆம் தேதி மனிதன் முதல் முதலில், நிலவில் தரையிறங்கியதன் 51 வது ஆண்டு நிறைவைக் முன்னிட்டு இந்த போட்டி நடைபெற்றது.

இந்த ஓட்டப்பந்தயத்தில் மூலம், ரூ. 19,00,000 நிதி திரண்டது. இதுகுறித்து கோபிசந்த் அவர்கள் கூறுகையில், தங்கள் சொந்த ஆரோக்கியத்துக்காகவும், கொரோனா வைரஸ் தொற்று நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பங்களிப்பதற்காகவும் காட்டிய அர்ப்பணிப்பு உண்மையிலேயே பாராட்டத்தக்கது. அவர்கள் ஒவ்வொருவருக்கும் எனது இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து நன்றி கூறுகிறேன் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube