அரசு நிதியில் ஆளுங்கட்சி விளம்பரம்…! தேர்தல் ஆணையம் உத்தரவு பிறக்குமாறு உயர்நீதிமன்றம் ஆணை…!

திமுக கொடுத்த வழக்கை பரிசீலனை செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பிக்குமாறு, உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

வெற்றிநடை போடும் தமிழகம் விளம்பரத்துக்கு தடை விதிக்க கோரி, திமுக டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ஆகியோர் அமர்வின் போது விசாரணைக்கு வந்தது. இதனையடுத்து, இந்த விளம்பரங்கள் கடந்த 18-ம் தேதியுடன் நிறுத்தப்பட்டதாகவும், மேற்கொண்டு விளம்பரங்கள் வெளியிடப்படவில்லை என்றும் தமிழக அரசின் தரப்பில் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து, திமுக கொடுத்த வழக்கை பரிசீலனை செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பிக்குமாறு, உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. மேலும், தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வன்முறையை தவிர்க்க வேண்டும் என்றும் அரசியல் கட்சிகளுக்கு உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.