ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகளை வெளியிட்ட மத்திய அரசு!

ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதன்காரணமாக, பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. இதன்காரணமாக சில பள்ளிகள், ஆன்லைனில் வகுப்புகளை நடத்தி வருகிறது.

இந்த ஆன்லைன் வகுப்புகள், நீண்ட நேரம் நடைபெற்று வருவதால், குழந்தைகளின் கண்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாற்றுகள் எழுந்து கொண்டே வந்தது. இந்த புகார்களை கருத்தில் கொண்ட மத்திய அரசு, ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில்,

  • எல்.கே.ஜி., யூ.கே.ஜி. குழந்தைகளுக்கு 30 நிமிடங்கள் மட்டுமே ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும்.
  • 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 45 நிமிடங்கள் மிகாமல் 2 அமர்வுகள் மட்டுமே நடத்த வேண்டும் எனவும்,
  • 9 முதல் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 45 நிமிடங்களுக்கு மிகாமல் 4 அமர்வுகளாக நடத்தலாம் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.