இந்தியாவிலிருந்து வெளியே விமானத்தில் பயனிக்க QR குறியீட்டுடன் RT-PCR சோதனை கட்டாயம்..

இந்தியாவிலிருந்து வெளியே விமானத்தில் செல்ல கொரோனா டெஸ்ட் சான்றிதழில் உள்ள QR கோட் அவசியம்.

பயணிகள் தாங்கள் செல்லும் நாடுகளின் வழிகாட்டுதல்களின்படி எதிர்மறை RT-PCR சோதனை அறிக்கையைதேவைப்படும் அனைத்து பயணிகளுக்கும் இந்த விதி பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா 2 வது அலை அதிகளவில் பரவி பேரளிவுகளை ஏற்படுத்தியுள்ளது, மேலும் இந்தியாவில் உயிர்சேதங்களின் எண்ணிக்கையோ நாளுக்கு நாள் உச்சத்தை எட்டிவருகிறது. இதற்கிடையில் இந்தியாவில் இருந்து வரும் அணைத்து பயணிகள் விமானத்தையும் உலக நாடுகள் தடைசெய்து வருகிறது.

தற்போது உருமாரிய கொரோனா மற்றும் விதவிதமான பூஞ்சை தொற்றுக்கள் இந்தியாவில் சில மாநிலங்களில் பரவி பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழலில் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், பயணிகள் 2021 மே 22 ஆம் தேதி 0001 மணி நேரத்திற்குப் பிறகு இந்தியாவில் இருந்து புறப்படும் சர்வதேச விமானங்களில் ஏறுவதற்கு QR குறியீட்டைக் கொண்டு எதிர்மறையான RT-PCR சோதனை சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்று அமைச்சகம் விமான நிறுவனங்களுக்கு  அறிவுறுத்தியுள்ளது.