தந்தை வீடுகட்ட சேர்த்து வைத்திருந்த ரூ.8 லட்சம் பணம்..! பப்ஜி விளையாட்டிற்காக திருடிய மகன்கள்..!

தந்தை வீடுகட்ட சேர்த்து வைத்திருந்த ரூ.8 லட்சம் பணத்தை எடுத்து, பப்ஜி விளையாட்டிற்காக செலவிட்ட மகன்கள். 

சென்னை தேனாம்பேட்டையில், மளிகை கடை நடத்தி வருபவர் நடராஜன். இவருக்கு 2 மகன்கள் உள்ள நிலையில், அவர்கள் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். அவர்கள் இருவரும் ஆன்லைன் வகுப்பிற்காக வாங்கி கொடுத்த மொபைல் போனில், தடை செய்யப்பட்ட பப்ஜி கேமை VPN மூலமாக விளையாடி வந்தனர்.

 இந்நிலையில்,நடராஜன் வீடு வாங்குவதற்காக சிறுக, சிறுக சேமித்து வைத்திருந்த ரூ.8 லட்சம் திடீரென காணாமல்  போயுள்ளது. கொள்ளைபோயிருக்க வாய்ப்பில்லை என அறிந்த அவர், மனைவி மற்றும் மகன்களிடம் விசாரித்துள்ளார். அப்போது, பணத்தை எடுத்ததை சிறுவர்கள் ஒப்புக் கொண்டனர். பின் மகன்களிடம் பணத்தை என்ன செய்தீர்கள் என நடராஜன் விசாரித்துள்ளார்.

அப்போது பப்ஜி கேமை விளையாடி வந்த அவர்களிடம், அதிக லெவலை முடித்த ஐ.டி-யை காட்டி, அந்த ஐ.டி-யை தனது பெற்றோர் மூலம் வாங்கி தருவதாக மற்றோரு சிறுவன் கூறியதும் தெரியவந்துள்ளது. இந்த ஐ.டி-யை பெறுவதற்காக தந்தை சேமித்து வைத்திருந்த பணத்தை, நடராஜனின் மகன்கள் இருவரும், ஐம்பதாயிரம், ஐம்பதாயிரமாக எடுத்து நண்பனிடம் கொடுத்தாததாக கூறியுள்ளனர்.

இதனையடுத்து, அவர்களின் நண்பனை பிடித்து விசாரித்த போது, அந்த பணத்தை தனது பெற்றோர்களான ராஜசேகர் – மெரிடாவிடம் கொடுத்ததாக  கூறியுள்ளார். இதனையடுத்து, அதிர்ச்சியடைந்த நடராஜன் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், ராஜசேகர் – மெரிடா ஆகியோர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், மிரட்டல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.