16 மாநிலங்களுக்கு ரூ. 6,000 கோடி ஜிஎஸ்டி இழப்பீடு..!

2020 – 2021 ஆம் ஆண்டுகளில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக ரூ .1.1 லட்சம் கோடி திரட்டி, மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கப்படும் என மத்திய அரசு கடந்த வாரம் தெரிவித்தது.

முதற்கட்டமாக ரூ .6,000 கோடியை 16 மாநிலங்களுக்கும் இரண்டு யூனியன் பிரதேசங்களுக்கும் கடன் வாங்கியுள்ளதாக நிதி அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது.

அதில் ஆந்திரா, அசாம், பீகார், கோவா, குஜராத், ஹரியானா, இமாச்சல பிரதேசம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேகாலயா, ஒடிசா, தமிழ்நாடு, திரிபுரா, உத்தரபிரதேசம், உத்தரகண்ட் ஆகிய 16 மாநிலங்களுக்கும்,  இரண்டு யூனியன் பிரதேசங்கள் டெல்லி  மற்றும் ஜம்மு-காஷ்மீருக்கு முதல் தவணையாக ரூ .6,000 கோடியை கடன் வழங்கப்பட்டுள்ளது என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடன் வாங்குவது 5.19 சதவீத வட்டி விகிதத்தில் உள்ளது. மேலும் கடன் வாங்குவதற்கான காலம் 3 முதல் 5 ஆண்டுகள் வரை பரவலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஒவ்வொரு வாரமும் மாநிலங்களுக்கு ரூ .6,000 கோடியை வெளியிட அமைச்சகம் தெரிவித்துள்ளது.

author avatar
murugan