#BREAKING: பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வைப்பு நிதி – ஸ்டாலின் அறிவிப்பு ..!

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 5 லட்சம் வைப்புத் தொகை என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கொரோனா நோய் தொற்றினால் பெற்றோர்களை இழந்த குழந்தைகள் பாதிக்கப்பட்டு நிலையில் அவருடைய வருங்காலத்திற்காக பல்வேறு விதமான நிவாரண உதவிகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அதன்படி, தமிழகத்தில் கொரோனா நோய்களால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு அவர்களது பெயரில் தலா ஐந்து லட்சம் ரூபாய் வைப்பு நிதி வழங்கப்படும் எனவும் அந்த குழந்தை 18 வயதில் நிறைவடையும் போது அந்த தொகை வட்டியுடன் அந்த குழந்தைக்கு வழங்கப்படும் என்றும் தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார் .

பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம் என்பது வழங்கப்படும் என்றும் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு  பட்டப்படிப்பு வரை கல்விக் கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும் எனவும் தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டார்.

மேலும் உறவினர் அல்லது பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பராமரிப்புச் செலவுகளுக்காக மாதந்தோறும் ரூபாய் 3000 உதவித் தொகையை அவர்கள் 18 வயது நிறைவடையும் வரை வழங்கப்படும்.

ஏற்கனவே தாய் தந்தையை இழந்து தற்போது கொரோனா தொற்று நோயால்  மற்றொரு பெற்றோரையும் இழந்த குழந்தைகளுக்கு ரூபாய் 5 லட்சம் அவர்களது பெயரில் வைப்பீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

author avatar
murugan