Worldcup 2023 Champions Autralia

ஒட்டுமொத்த பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா.? அள்ளிச்சென்ற ஆஸ்திரேலியா.!

By

நேற்று (நவம்பர் 19) அன்று குஜராத், அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொண்ட உலககோப்பை 2023-இன் இறுதியாட்டம் நடைபெற்றது.

   
   

இந்த தொடரில் அதுவரையில் தோல்வியே கண்டிராத அணியாக இருந்த ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இறுதி போட்டியிலும் நிச்சயம் வெற்றி பெரும் என்ற நம்பிக்கையுடனும், ஏற்கனவே லீக் தொடரில் வெற்றி பெற்ற கூடுதல் நம்பிக்கையுடன் இந்திய ரசிகர்கள் போட்டியை காண ஆரம்பித்தனர்.

உலகக் கோப்பையை வென்றது சர்வதேச கிரிக்கெட்டின் உச்சம்.! பாட் கம்மின்ஸ்

ஆனால், இறுதியில், இந்திய ரசிகர்களின் நம்பிக்கையை பொய்யாக்கும் விதமாக இந்திய அணி அதிர்ச்சி தோல்வியை கண்டது. 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா, 6வது முறையாக உலகக்கோப்பையை தன்வசமாக்கியது. இந்தியாவுக்கு எதிராக அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதி போட்டியில் வெற்றி பெற்றது.

உலகக்கோப்பையில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ஏற்கனவே அறிவித்து இருந்தபடி, ரூபாய் 33 கோடி ரூபாய் (4 மில்லியன் அமெரிக்க டாலர்) வழங்கப்பட்டது. அதே போல, இரண்டாம் இடம் பிடித்த இந்திய அணிக்கு 16 கோடி ரூபாய் (2 மில்லியன் அமெரிக்க டாலர்) வழங்கப்பட்டது.

அரையிறுதியில் வெற்றி வாய்ப்பை இழந்த தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிக்கு தலா 6.50 கோடி வழங்கப்பட்டது. லீக் தொடரில் பங்கேற்ற அனைத்து அணிக்கும் 83 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. அடுத்து லீக் தொடரில் ஒவ்வொரு அணியும் வெற்றி பெற்ற புள்ளிகளுக்கு தலா 33 லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Dinasuvadu Media @2023