ரூ.300 கோடி மதிப்பிலான நமக்கு நாமே திட்டம்;100 கோடி மதிப்பிலான வேலைவாய்ப்பு திட்டம் – தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்!

cm mk

சேலம்:ரூ.300 கோடி மதிப்பிலான நமக்கு நாமே திட்டம் மற்றும் 100 கோடி மதிப்பிலான நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

இன்று சேலம் மாவட்டம் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அரசு விழாவில் பங்கேற்றுள்ளார். தற்போது,சீலநாயக்கன்பட்டி நடைபெறும் அரசு விழாவில்,ரூ.300 கோடி மதிப்பிலான நமக்கு நாமே திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.இதனையடுத்து,31 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

மேலும்,வேலை இல்லா திண்டாட்டத்தை போக்கும் நோக்கில் 100 கோடி மதிப்பிலான நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தையும் முதல்வர் தொடங்கி வைக்கிறார்.மேலும்,ரூ.60 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களையும் முதல்வர் தொடங்கி வைக்கிறார்.

இவ்விழாவில்,முதல்வரோடு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு,கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி,உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து,திமுக நிகழ்ச்சியிலும் முதல்வர் கலந்து கொண்டு மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வீரபாண்டி ராஜா என்பவரது உருவப்படத்தையும் திறந்து வைக்கிறார்.