நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ.2550.75 கோடி பறிமுதல்

9

இந்தியா முழுவதும் 7கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.தமிழகத்தில் 2 கட்டமாக வருகின்ற 18-ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.

மக்களவை தேர்தலுக்காக நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படை சோதனை நடத்தி வருகிறது.தினமும் கோடிக்கணக்கான பணங்கள் உரிய ஆவணங்கள் இன்றி தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்து வருகிறது.

இந்நிலையில் இதுவரை உரிய  ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ.2550.75 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்து உள்ளனர். தமிழகத்தில் இதுவரை ரூ.499.47 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் உள்ளனர்.