கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.23 ஆயிரம் கோடி ஒதுக்கீடு – பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை நேற்று முன்தினம் விரிவாக்கம் செய்யப்பட்டு பல துறைகளில் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, நேற்று பிரதமர் மோடி தலைமையில், புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், புதிதாக பதவியேற்ற 43 அமைச்சர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்காக, ரூ.23 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடி தனது ட்விட்டர் பக்கத்தில், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை மேலும் வலுப்படுத்த, 23 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குழந்தை பிரிவில் ஐசியூ படுக்கை வசதி, ஆக்சிஜன் சேமிப்பு, ஆம்புலன்ஸ் மற்றும் மருந்துகள் வாங்குவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.