கட்டுக்கட்டாக கிடந்த ரூ.2,000 நோட்டுகள்…கழிவுநீரில் குதித்து அள்ளிய பொதுமக்கள்…வைரலாகும் வீடியோ.!!

கட்டுக்கட்டாக கிடந்த ரூ.2,000 நோட்டுகள்…கழிவுநீரில் குதித்து அள்ளிய பொதுமக்கள்…வைரலாகும் வீடியோ.!!

Patna

பீகார் மாநிலதில் பணத்தை எடுப்பதற்காக மக்கள் கழிவுநீரில் கூட்டமாக குதித்துள்ளனர். 

பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ள மொராதாபாத் கிராமத்தில் உள்ள கழிவுநீர் வாய்க்கால் ஒன்றில் 2000, 500 ரூபாய் நோட்டுகள் கிடைந்ததால் கிராம மக்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பிறகு கழிவுநீரில் குதித்த பொதுமக்கள் ஏராளமானோர் ரூ.2,000, ரூ.500, ரூ.100, ரூ.10 உள்ளிட்ட பல்வேறு மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை அள்ளி சென்றார்கள்.

காலையிலேயே வாய்க்காலில் ரூபாய் ந ட்டுகள் அடங்கிய பைகள் காணப்பட்டன. உடனடியாக இந்த தகவல் மக்களுக்கு தெரியவர கூட்டம் கூட்டமாக அந்த இடத்திற்கு சென்று பணத்தை அள்ள தொடங்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் அந்த ரூபாய் நோட்டுகள் உண்மையான ரூபாய் நோட்டாக என்றும், அதனுடைய  நம்பகத்தன்மையை கண்டறியவும், அவற்றை வாய்க்காலில் வீசியவர்கள் யார் என்பதைக் கண்டறியவும் அதிகாரிகள் இப்போது சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணையை தொடங்கியுள்ளது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube