சுய உதவிக்குழுக்களை மேம்படுத்துவதற்காக ரூ.200 கோடி கடன் தொகை - மத்திய பிரதேச முதல்வர்

சுய உதவிக்குழுக்களை மேம்படுத்துவதற்காக ரூ.200 கோடி கடன் தொகை - மத்திய பிரதேச முதல்வர்

சுய உதவிக்குழுக்களை மேம்படுத்துவதற்காக மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ரூ.200 கோடி கடன் தொகையை வழங்கியுள்ளார்.

மத்திய பிரதேசம் போபாலில் சுய உதவிக்குழுக்களை மேம்படுத்தும் மற்றும் கடன் வழங்கல் திட்டத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டார். அம்மாநிலத்தில் பெண்கள் அதிகாரமளிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக 1.30 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு ரூ.200 கோடி கடன் வழங்கப்பட்டது.

இதனிடையே, உஜ்ஜைனிலுள்ள இந்தோக் கிராமத்தில் நீர்வழங்கலை மேம்படுத்துவதற்கான ரூ.79.03 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்தோக் தடுப்புத் திட்டத்தையும் சவுகான் திறந்து வைத்தார். பின்னர் இவ்விழாவில் பேசிய முதல்வர், நான் இந்த மாநில மக்களுக்கு சேவை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளேன். எனது அரசாங்கம் மக்களின் நலனுக்காக தன்னை அர்ப்பணிப்பதாகும். இந்த திட்டம் இப்போது, பண்ணைகளின் பயனுள்ள நீர்ப்பாசனத்திற்கு உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.

Latest Posts

முடிந்தால் எங்கள் கட்சியை கவிழ்த்து பார்க்கட்டும்! பாஜக-வுக்கு சவால் விடுக்கும் உத்தவ் தாக்கரே!
அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை தொடர்ந்து பின்னடைவு..?
அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைகிறேன் - மு.க.ஸ்டாலின்
#Breaking: வேளாண் சட்டங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு!
பாஜகவில் இணைந்த மோகன் வைத்யா..!
வண்டி சக்கரத்தில் சேலை மாட்டியதால், தலையில் அடிபட்டு பெண் உயிரிழப்பு!
பீகார் சட்டப்பேரவை தேர்தல் : முதல்கட்ட பிரச்சாரம் இன்றுடன் நிறைவு
தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைவு..!
அதிமுக அரசு பல முன்னோடித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது-முதல்வர்.!
அதிகரிக்கும் கொரோனா.. ஸ்பெயின் நாட்டில் மீண்டும் அவசரநிலை அறிவிப்பு!