தமிழகத்திற்கான ரூ.19,053 கோடியை விடுவிக்க வேண்டும் – திமுக எம்பி வில்சன்

சட்டப்பூர்வமாக செலுத்த வேண்டியதை நிறுத்த வைப்பதன் மூலம் ஒரு மாநிலத்தின் செயல்பாட்டை முடக்க முடியாது என எம்பி வில்சன் பேச்சு.

தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு நிலுவை வைத்துள்ள ரூ.19,053 கோடியை உடனே விடுவிக்க வேண்டும் என பி.விலாசம் எம்பி வலியுறுத்தியுள்ளார். 2020 முதல் 2022-23 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையாக மட்டுமே ரூ.10,879 கோடி பாக்கி உள்ளது. உடனடியாக அதனை விடுவிக்க வேண்டும் என மாநிலங்களவையில் பேசிய திமுக எம்பி வில்சன் மத்திய அரசுக்கு வலியுறுத்தினார்.

மத்திய அரசு நிலுவை தொகையை வழங்க தாமதிப்பது, வளர்ச்சி திட்டங்களை பாதிக்கும் வகையில் உள்ளது. சட்டப்பூர்வமாக செலுத்த வேண்டியதை நிறுத்த வைப்பதன் மூலம் ஒரு மாநிலத்தின் செயல்பாட்டை முடக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். எனவே, பல்வேறு வகைகளின் கீழ் தமிழக அரசுக்கு மொத்தம் ரூ.19,053 கோடி அளவுக்கு மத்திய அரசு பெரும் தொகையை நிலுவையில் வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டு பேசினார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment