ரூ.127 கோடி நிதி கிடைத்துள்ளது – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்.!

  • தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் 2 லட்சம் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே ஆயகொளத்தூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கடந்த 3 ஆண்டுகளில் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.127 கோடி நிதி கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து காஞ்சிபுரத்தில் ரூ.18 கோடி மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் மாவட்ட விளையாட்டு மைதானத்தை வரும் மார்ச் 4ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க உள்ளதாக கூறினார். மேலும் தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் 2 லட்சம் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்