#குட் நியூஸ்: ரூ.12,110 கோடி பயிர் கடன் தள்ளுபடி – விவசாயிகள் பெரும் வரவேற்பு.!

கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர் கடன்கள் ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்யப்பட்டதை விவசாயிகள் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

கடந்த 2-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது. இதையடுத்து சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் கூட்டத்தொடர் குறித்து முடிவு எடுக்கப்பட்டது. இதில், சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதமும், பதிலுரையும் நடைபெற்றது. இதன்பின் சட்ட மசோதா ஆய்வு செய்தலும், நிறைவேற்றுதலும் நடைபெற்று வருகிறது. இதில், பேசிய முதல்வர் பழனிசாமி, தமிழக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளார்.

பயிர் கடன் தள்ளுபடி மூலம் 16.43 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட்டதாக தெரிவித்து, முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும், உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது, எழுவாரை எல்லாம் பொறுத்து என்ற குறளையும் மேற்கொளக்காட்டியுள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டில் விவசாயிகளின் கூட்டுறவு வங்கி பயிர் கடனை ரத்து செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வரின் பயிர் கடன் தள்ளுபடி அறிவிப்புக்கு விவசாயிகள் வரவேற்பு அளித்து வருகின்றனர். இதுகுறித்து பேசிய விவசாய சங்கத்தின் பிஆர் பாண்டியன், நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தியதை, எதிர்பார்க்காத நேரத்தில் முதல்வர் அறிவித்துள்ளது மிகுந்த வரவேற்புக்குரியது. இதனை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம், முதல்வரை பாராட்டுகிறோம் என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், கொரோனா காலத்தில் முழுவதும் அழிந்துவிட்டது. பொருளாதாரம் முற்றிலும் நலிவடைத்துள்ளது.

விவசாயிகள் உற்பத்தியை அதிகரித்ததால் தான் இந்திய பொருளாதாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது என பிரதமரே கூறியுள்ளார். ஆனால், விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்க மறுக்கிறார். கொரோனாவால் விவசாயிகள் இழந்த இழப்புக்கு பிரதமர் இதுவரை பங்கெடுத்துக்கவில்லை. ஆகையால், விவசாயிகளின் நலன் கருதி, வங்கிகள் கடனையும் தள்ளுபடி செய்யவேண்டும். மேலும், மறு உற்பத்திக்கு விவசாயிகள் ஈடுபடுவதற்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

காசர்கோடு விவகாரம்! இது உண்மைக்கு புறம்பானது.. இந்திய தலைமை தேர்தல் ஆணையம்!

Election2024: மின்னணு வாக்கு இயந்திரத்தில் பாஜகவுக்கு கூடுதல் வாக்கு விழுவதாக எழுந்த புகாருக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு. கேரளா மாநிலத்தில் உள்ள 20 மக்களவை…

14 mins ago

ஜியோ பயனர்களே! சிறந்த ஹாட்ஸ்டார் பிளான் தேடிட்டு இருக்கீங்களா?

Jio Hotstar Plan : ஜியோவில் வருடாந்திர ரீசார்ஜ் செய்பவர்களுக்காக ஒரு அசத்தலான ஹாட்ஸ்டார் திட்டம் வந்து இருக்கிறது. ஜியோ சிம் பயன்படுத்தி வருபவர்கள் பலரும் ரீசார்ஜ்…

28 mins ago

வியர்வை நாற்றம் தாங்க முடியலையா ?அப்போ இந்த டிப்ஸ பாலோ பண்ணுங்க..!

Sweating-கோடை காலத்தில் ஏற்படும் அதிக வியர்வையை கட்டுப்படுத்துவது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். பலரும் வேர்வை துர்நாற்றத்தால் மன உளைச்சலுக்கு சென்று விடுகின்றனர். அதுவும் வெயில்…

31 mins ago

கம்ப்யூட்டர் அதிகமா யூஸ் பண்றீங்களா? அப்போ இந்த ஷாட் கட் எல்லாம் தெரிஞ்சிக்கோங்க!!

Short Cut Keys : கம்ப்யூட்டர் உபயோகிக்கும் நம்மில் பலருக்கும் தெரியாத சில ஷார்ட்கட் கீ களை பற்றி பார்ப்போம். இன்றைய காலத்தில் கம்ப்யூட்டர் (Computer) பயன்பாடு…

55 mins ago

ஷங்கர் மகள் திருமணத்தில் பட்டையை கிளப்பிய அதிதி, அட்லீ, ரன்வீர் சிங்.!

Shankar daughter wedding: ஷங்கர் இல்லத் திருமண விழாவில் நடனம் ஆடி அட்லீ, ரன்வீர் சிங் ஆகியோர் பட்டையை கிளப்பினர். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள்…

1 hour ago

ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய டெவோன் கான்வே… சென்னை அணிக்கு புதிய வீரர் இவர்தான்!

ஐபிஎல்2024: காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து டெவோன் கான்வே விலகினார் என்று ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக…

2 hours ago