கஜா புயல் பாதிப்பு: தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.1146 கோடி ஒதுக்கீடு …!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.1146 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
கஜா புயல் நிவாரணமாக 15 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தினார். கஜா புயல் பாதித்த பகுதிகளில் டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான மத்தியக் குழுவினர் நேரில் ஆய்வு செய்து ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இந்நிலையில், கஜா புயல் பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையிலான குழு டெல்லியில் நாடாளுமன்ற நிலைக்குழுவுடன் ஆலோசனை நடத்தியது.
Image result for கஜா
இந்நிலையில்  கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.1,146.12 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.இதற்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையிலான உயர்நிலைக்கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது
ஏற்கனவே 357 கோடி ரூபாயை மட்டுமே மத்திய அரசு நிவாரண நிதியாக வழங்கியது.

Leave a Comment