ரூ.10,000 அபராதம்., 2 ஆண்டுகள் வழக்கு தொடர தடை! – உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு 2 ஆண்டுகள் பொதுநல வழக்கு தொடர தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.

அரசு அலுவலகங்களில் சிசிடிவி கேமரா பொருத்தவும், லஞ்சம் வாங்க கூடாது என பெயர்ப்பலகை வைக்கவும் மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்திருந்தார். அதில், ஊழல் குற்றசாட்டுகளுக்குள்ளான அதிகாரிகளின் சொத்துக்களை முடக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது பொதுநல வழக்கு முறையாக தாக்கல் செய்யவில்லை என்றும் எந்தவொரு ஆதாரமும் இல்லாமல், விளம்பரத்திற்காக மனுதாக்கல் செய்துள்ளதால், மனுதாரர் கே.கே.ரமேஷ் என்பவருக்கு ரூ.10,000 அபராதம் விதித்து, 2 ஆண்டுகள் வழக்கு தொடரவும் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை தடுக்க சிசிடிவி கேமரா பொறுத்த வேண்டும் என்றும் ஊழல் குற்றசாட்டுகளுக்குள்ளான அதிகாரிகளின் சொத்துக்களை முடக்க வேண்டும் எனவும் உத்தரவிட கோரிய மனுவை தள்ளுபடி சென்னை உயர்நீதிமன்றம் செய்தது.

author avatar
Castro Murugan