4 கி.மீ தூரத்திற்கு ரூ.10,000 ஆம்புலன்ஸ் வாடகை…! ஐபிஎஸ் அதிகாரி வெளியிட்ட புகைப்பட பதிவு…!

டெல்லியில் 4 கி.மீ தூரத்திற்கு ஆம்புலன்ஸ் வாடகை ரூ.10,000 பெறப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக, காட்டு தீ போல் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால், இந்தியாவில், தினசரி பாதிப்பு 3.50 லட்சத்தை கடந்துள்ள நிலையில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், தொற்றால் இறப்பவர்களின் சடலங்களை எரிப்பதற்கு கூட இடமில்லாமல் திண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், ஐபிஎஸ் அதிகாரி அருண் போத்ரா என்பவர், தனது ட்வீட்டர் பக்கத்தில், ஏப்ரல் 25-ம் தேதி பதிவிடப்பட்ட, ஆம்புலன்ஸ் ரசீது ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த ரசீதில், டெல்லியில் 4 கி.மீ தூரத்திற்கு ஆம்புலன்ஸ் வாடகை ரூ.10,000 பெறப்பட்டுள்ளது. இந்த ரசீதை பதிவிட்ட அவர், ‘இந்த உலகம் இன்று நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறது. பேரழிவுகளை மட்டுமா. உங்களது தார்மீக மதிப்புகளை கூட’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.