பயணி தாக்கியதில் உயிரிழந்த நடத்துனருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி – முதல்வர் மு.க.ஸ்டாலின்

அரசுப் பேருந்தில் நடந்த தாக்குதலில் உயிரிழந்த நடத்துனர் பெருமாள் குடும்பத்தினருக்கு ₹10 லட்சம் நிதி உதவி வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்உத்தரவிட்டுள்ளார். 

சென்னையிலிருந்து திண்டிவனம் நோக்கி சென்ற விழுப்புரம் அரசு பேருந்தில் மேல்மருவத்தூர் அருகே பேருந்து நடத்துனர் மற்றும் அதில் பயணித்த பயணி ஆகிய இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறில் ஈடுபட்ட பயணி மது போதையில் இருந்த நிலையில் அவர் நடத்துனர் பெருமாளை தாக்கியுள்ளார்.

இதனால் அவர் பலத்த காயம் அடைந்துள்ளார். இதனையடுத்து அவர் மேல்மருவத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்காக கொண்டு சென்ற வழியிலேயே உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் நடத்துனரை தாக்கிய பயணி கைது செய்துள்ளனர்.

 இதனையடுத்து, அரசுப் பேருந்தில் நடந்த தாக்குதலில் உயிரிழந்த நடத்துனர் பெருமாள் குடும்பத்தினருக்கு ₹10 லட்சம் நிதி உதவி வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here