அஜய் தேவ்கன் பிறந்த நாளிற்கு பரிசளித்த ஆர்ஆர்ஆர் படக்குழு..!!

ஆர்ஆர்ஆர் படத்தில் அஜய் தேவ்கன் நடிக்கும் கதாபாத்திரத்திற்கான மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. 

இயக்குனர் ராஜமௌலி பாகுபலியின் பிளாக் பஸ்டர் வெற்றிக்கு பின் தற்போது ‘ஆர்ஆர்ஆர்'(ரத்தம், ரணம், ரௌத்திரம்) எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.பான்-இந்தியா படமாக உருவாகும் “ஆர்ஆர்ஆர்”-இல் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி , ஸ்ரேயா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.மேலும் பல ஹாலிவுட் பிரபலங்களும் நடிப்பதாக கூறப்படுகிறது.

தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகி வரும் ஆர்ஆர்ஆர் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பானது தற்போது ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் நடிக்கும் அஜய் தேவ்கன் இன்று தனது 52 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள். அந்த வகையில் தற்போது ஆர்ஆர்ஆர் படக்குழுவினர் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், படத்தில் அவர் நடிக்கும் கதாபாத்திரத்திற்கான மோஷன் போஸ்டரை வெளியீட்டுள்ளனர்.