இனி தமிழிலும் RRB தேர்வுகளை எழுதலாம்!-மத்திய அரசு அறிவிப்பு

RRB எனப்படும் கிராமப்புற வங்கிகளுக்கான தேர்வுகளை இனி தமிழ் உட்பட 13 மாநில மொழிகளில் எழுதலாம் என்று  மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

RRB எனப்படும் கிராமப்புற வங்கிகளுக்கான தேர்வுகளை எழுதுபவர்கள் ஏற்கனவே ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் தேர்வு எழுதி வருகிறனர்.ஆனால் அண்மைகாலமாக அந்தந்த மாநில மொழிகளில் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் குவிந்தது.

இந்நிலையில் இன்று ஒரு அறிவிப்பை விடுத்தார் மத்திய நிதித்துறை அமைச்சர் அதில் RRB எனப்படும் கிராமப்புற வங்கிகளுக்கான தேர்வுகளை இனி தமிழ் உட்பட 13 மாநில மொழிகளில் எழுதலாம் என்று  தெரிவித்தார். இனி வரவிருக்கும் RRB தேர்வுகளில் எல்லாம் இந்த புதிய முறையானது  அமல்படுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

அதன்படி  தமிழ், அஸ்ஸாமீஸ், வங்கமொழி, குஜராத்தி, கன்னடம், கொங்கனி, மலையாளம், மணிப்பூரி ,மராத் ,ஒடியா , பஞ்சாபி , தெலுங்கு,உருது ஆகிய மொழிகளில் இனி தேர்வானது நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

author avatar
kavitha