#IPL2020 : ராஜஸ்தான் அணிக்கு 158 ரன்கள் இலக்கு

ராஜஸ்தான் அணியுடனான போட்டியில் முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி 158 ரன்கள் அடித்துள்ளது.

இன்று நடைபெற்று வரும் 26-வது ஐபிஎல் போட்டியில் டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் ,ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதி வருகின்றது. இந்த போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக , ஜானி பேர்ஸ்டோவ் ,வார்னர் ஆகியோர் களமிறங்கினார்கள். இந்த போட்டியிலும் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜானி பேர்ஸ்டோவ் , ராஜஸ்தான் அணியின் வீரர் தியாகி பந்துவீச்சில் 16  ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.பின்பு சிறப்பாக விளையாடிய வார்னர் 48 ரன்களிலும், மனிஷ் பாண்டே 54 ரன்கள் அடித்து வெளியேறினார்கள்.

இறுதியாக ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 158 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் வில்லியம்சன் 22* ரன்களுடன் இருந்தார். பிரியம் கார்க் கடைசி பந்தில் 15 ரன்களில் ரன் அவுட்டாகினார். ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சில் உனட்கட், தியாகி, ஆர்ச்சர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 159 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்க உள்ளது.