தாகத்தில் தவிக்கும் தலைநகரம்..! தன் பங்கிற்கு 18 லட்சம் தண்ணீரை சேமித்து கொடுத்த ராயல் என்ஃபீல்டு..!

தமிழகத்தில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர்.தமிழகமெங்கும் 24 மாவட்டங்களில் தண்ணீரின்றி மக்கள் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அண்மையில் மழை தமிழகத்தில் அநேக இடங்களில் பெய்து வருகிறது.இதனை மக்கள் தங்கள் பங்கிற்கு சேமித்து வருகின்றனர்.
தமிழகத்தின் தலைநகராக விளங்கும் சிங்கார சென்னை தண்ணீர்க்கு தவித்து வருகின்றது.இந்நிலையில் பைக் நிறுவனங்கள் தங்களது பங்கிற்கு தண்ணீரை சேமிக்க வழிகளை உருவாக்கி வருகின்றது.
Related image

மேலும் வாடிக்கையாளர்களின் சேவையையும் சிறப்பாகவும் செய்கிறது.தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளித்தும் வாகனங்களை வாஷ் செய்யவும் ராயல் என்ஃபீல்டு  நிறுவனம்   முதல் முறையாக ஒரு   நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது.
இந்நிலையில் அதிக வரவேற்பை பெற்ற ராயல் என்ஃபீல்டு  நிறுவனம் தன் பங்கிற்கு சென்னை முழுவதும் கிட்டத்தட்ட  20 சர்வீஸ் மையங்ககளை  டிரை வாஷ் சிஸ்டம்களை பயன்படுத்தி வருகிறது.
அதன் படி புதிய டிரை வாஷ் என்கின்ற சிஸ்டத்தை  மிகக்குறைவிலான தண்ணீரை கொண்டு பைக்கினை மிக சிறப்பாக சுத்தம் செய்ய  முடியும். இப்படி செய்வதால் எப்பொழுதும் போல் வாகனம் பிரகாசமாக காட்சி தரும் என்று தெரிவித்துள்ளது.
இந்த புதிய நடைமுறையினால் சென்னையில் மட்டும்  மாதம் 18 லட்சம் நீரை சேமிக்க முடிகிறது என்று ராயல் என்ஃபீல்டு தரப்பில் கூறியுள்ளது.
 

author avatar
kavitha