ரௌடி பேபி பாடல் இத்தனை சாதனைகளை செய்துள்ளதா?! இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்ட ஆச்சர்ய தகவல்!!!

தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் டிசம்பர் 21இல் வெளியான திரைப்படம் கனா. இந்த படத்தை நடிகர் தனுஷே தயாரித்திருந்தார். சாய் பல்லவி ஹீரோயினாக நடித்திருந்தார். இப்படம் பலத்த போட்டிக்கிடையே வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் படம் நல்ல வசூலை ஈட்டியது.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இதில் அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் குறிப்பாக ரௌடி பேபி பாடல் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றது.

இந்த பாடல் யூ-டியூபில் பல சாதனைகளை செய்துள்ளது. இதன் லிரிக்கள் வீடியோ 35 நாட்களில் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதன் வீடியோ பாடல் 24 மணி நேரத்தில் 288K லைக்ஸையும், அதே 24 மணி நேரத்தில் 7 மில்லியன் பார்வையாளர்களையும் கடந்துள்ளது. ஒரு தமிழ் பாடல் 350K மியூசிகலி விடியோக்கள் செய்தது இதுவே முதல் முறை. இதனை இப்பட இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர் .

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment