ரவுடி கொலை வழக்கு- குற்றவாளி குண்டர் சட்டத்தின் கீழ் கைது..?

சென்னை அண்ணாநகர் வில்லிவாகத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடி ஷாஜகான்,

By bala | Published: Jul 02, 2020 04:28 PM

சென்னை அண்ணாநகர் வில்லிவாகத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடி ஷாஜகான், இவருடைய நெருங்கிய நண்பர் பிரபு இவர் கடந்த மாதம் 4ம் தேதி வில்லிவாக்கத்தில் உள்ள ஒரு கிரிக்கெட் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது சண்முகம் என்பவர் அந்த பகுதிக்கு வந்தார் சண்முகத்துடன் அவருடைய கூட்டாளி அஜித் மற்றும் திவாகர் என்பவரும் வந்தனர்.

வந்தவுடன் ஒன்றும் கூறாமல் சண்முகம் மற்றும் திவாகர் அஜித் பிரபுவை தாக்கியுள்ளனர், மேலும் இதுகுறித்து பிரபு தனது நண்பர் ஷாஜகானிடம் நடந்ததைக் கூறினார் உடனே ஷாஜகான் சண்முகத்தை பார்க்க சென்றுள்ளார், சண்முகத்தை பார்தததும் ஷாஜகான் மிரட்டியுள்ளார் இந்த நிலையில் இதனால் கோபமடைந்த சண்முகம் ரவுடி ஷாஜகானை நடுரோட்டில் விரட்டி விரட்டி வெட்டி கொலை செய்துள்ளார் .

இந்நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அரிகரன், திவாகர், மற்றும் ஆகாஷ், ரமேஷ், சதிஷ்குமார், மணி, பஷிர் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து புழல் சிறையில் அடைத்தனர் மேலும் கொலை செய்த முக்கிய குற்றவாளியான சண்முகத்தை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.

Step2: Place in ads Display sections

unicc