Ronaldo 200

200 சர்வதேசப் போட்டிகளில் ரொனால்டோ… புதிய கின்னஸ் வரலாற்று சாதனை.!

By

கிறிஸ்டியானோ ரொனால்டோ 200 சர்வதேச கால்பந்து போட்டிகளில் விளையாடிய முதல்வீரர் என்ற வரலாறை படைத்துள்ளார்.

போர்ச்சுகல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஐஸ்லாந்துக்கு எதிரான UEFA யூரோ 2024 தகுதிச் சுற்று ஆட்டத்தில் பங்கேற்றதன் மூலம் இந்த வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார். 38 வயதான ரொனால்டோ இந்த போட்டியில் 89வது நிமிடத்தில் அடித்த ஒரு கோல் மூலம் போர்ச்சுகல் அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

ரொனால்டோவின் இந்த சாதனையை குறிக்கும் வகையில் அவருக்கு கின்னஸ் சாதனைச் சான்றிதழும் போட்டிக்கு முன்னதாக வழங்கப்பட்டது. ரொனால்டோ கடந்த 2003 ஆம் ஆண்டு கஜகஸ்தானுக்கு எதிராக அறிமுகமானதிலிருந்து தற்போது வரை 200 போட்டிகளில் விளையாடிய முதல் ஆடவர் கால்பந்து வீரர் என்ற சாதனை படைத்துள்ளார், இதனை போர்ச்சுகல் அணியும் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.

Dinasuvadu Media @2023