ரோஹித் - வார்னர் இருவரில் யாருடன் தொடக்க வீரராக இறங்க ஆசைப்படுகிறீர்கள்..?

ரோஹித் வார்னர் இருவரில் யாருடன் தொடக்க வீரராக இறங்க ஆசைப்படுகிறீர்கள்

By bala | Published: Jul 11, 2020 05:06 PM

ரோஹித் வார்னர் இருவரில் யாருடன் தொடக்க வீரராக இறங்க ஆசைப்படுகிறீர்கள் என்று கேட்டதற்கு அவர் பதிலளித்துள்ளார்.

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் , ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி, விளையாட்டு வீரர்கள் பலரும் வீட்டிலே முடங்கி இருப்பதால், பலரும் ரசிகர்களை சமூக வலைத்தளங்களில் உற்சாகப்படுத்தி வருகிறார்கள்.மேலும் ரசிகர்கள் மீண்டும் எப்பொழுது போட்டி என்று ஆவலுடன் காத்துள்ளனர்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா இந்தியாவிற்காக பல சாதனைகளை படைத்துள்ளார், இவருடைய பேட்டிங் திறமையை பற்றி நாம் சொல்லியே தெரியவேண்டாம், மேலும் ரோஹித் தனது 29 ஒருநாள் சதங்களில், 11 முறை 140-க்கும் அதிகமான ரன்களுடன் சதம் அடித்துள்ளார் பல சாதனைகளை படைத்து இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த வீரராக திகழ்கிறார்.

இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் கிரிக்கெட் வீரர் ஜேசன் ராய் ரசிகர்களுடன் கலந்துரையாடலின் பொழுது அவரிடம் ரோஹித் மற்றும் வார்னர் இருவரில் யாருடன் தொடக்க வீரராக இறங்க ஆசைப்படுகிறீர்கள் என்று கேட்டதற்கு ஜேசன் ராய் ரோஹித் சர்மா என்று கூறியுள்ளார்.

Step2: Place in ads Display sections

unicc