INDvAUS :2000 ரன்கள் கடந்து சச்சின் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா

இன்றைய போட்டியில் இந்திய அணியுடன் , ஆஸ்திரேலியா அணி மோதி வருகிறது. இப்போட்டி லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா ,ஷிகார் தவான் களமிறங்கினர்.இன்றைய போட்டியில் இருவரும் நிதானமாக விளையாடி 13 ஓவர் முடிவில் 63 ரன்கள் சேர்ந்து உள்ளனர்.
இந்நிலையில் இப்போட்டியில் ரோஹித் சர்மா 20 ரன்கள் கடந்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில்  ரோஹித் சர்மா அதிவிரைவாக 2000 ரன்கள் கடந்து சாதனை படைத்தது உள்ளார். இதற்கு முன் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முன்னாள் இந்திய அணி வீரர் சச்சின் 40 போட்டிகளில் விளையாடி இந்த சாதனையை படைத்தார்.
தற்போது ரோஹித் சர்மா 37 ஒருநாள் போட்டியில் விளையாடி அதிவிரைவாக 2000 ரன்கள் கடந்து சச்சின் சாதனையை  முறியடித்து  உள்ளார்.