பாகிஸ்தான் அணிக்கு எதிராக முதல் சதம் அடித்த ரோஹித் ஷர்மா!

இன்றைய போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும்  மோதி வருகிறது. இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இந்திய அணியில் தொடக்க வீரர்களாக லோகேஷ் ராகுல் , ரோஹித் ஷர்மா இருவரும் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாடிய இருவரும் 12 ஓவரில் 79 ரன்கள் குவித்தனர்.
இப்போட்டியில்  ரோஹித் ஷர்மா 38 பந்தில் 50 ரன்கள் குவித்தார்.அதில் 6 பவுண்டரி , 2 சிக்ஸர் விளாசினார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் ரோஹித் ஷர்மா அடித்த முதல் சதமாகும்.

author avatar
murugan