ஜெய்ஸ்வால் மட்டும் சர்ஃபராஸ் மீது கோபம் கொண்ட ரோஹித் சர்மா ..! வைரலாகும் வீடியோ ..!

இந்தியா, இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி  ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. நடந்த இந்த போட்டியில் இந்திய அணி அபார வெற்றியை பதிவு செய்திருந்தது. இதில் இரட்டை சதம் விளாசி இந்திய அணியின் வெற்றிக்கு ஜெய்ஸ்வால் மிகப்பெரிய பங்காற்றி இருந்தார்.

அடுத்த ஃப்ளைட்டை பிடித்து வீட்டுக்கு செல்லலாம் ..! இங்கிலாந்து அணியை விமர்சித்த கிருஷ் ஸ்ரீகாந்த் ..!

இந்த போட்டியில் நான்காம் நாளின் இரண்டாவது செஷனில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்து கொண்டிருந்த ஜெய்ஸ்வாலும், சர்ஃபராஸ் களத்தில் நின்று சிறப்பாக விளையாடி கொண்டிருந்தனர். இந்திய அணி அப்போது 500 ரன்கள் முன்னிலையில் இருந்தது.

அப்போது, 97 ஓவர்கள் முடிவடைந்திருந்த நிலையில் கள நடுவர்கள் ட்ரிங்ஸ் பிரேக் அறிவித்தனர். அதை களத்தில் இருந்த ஜெய்ஸ்வால் மட்டும் சர்ஃபராஸும், ரோஹித் டிக்ளர் செய்து விட்டார் என்று தவறாக புரிந்த கொண்டு பெவிலியன் நோக்கி நடக்க ஆரம்பித்தனர். அதை பெவிலியனிலிருந்து பார்த்த இந்திய அணியின் ரோஹித் சைகையில் “என்ன” என்று கேட்டு மீண்டும் பேட்டிங் செய்யுமாறு தெரிவித்தார்.

அவரது சைகையை கண்ட இருவரும், மீண்டும் பேட்டிங் செய்ய சென்றனர். இதை கண்ட மைதானத்தில் இருந்த ரசிகரக்ள் அனைவரும் சிரிப்பில் ஆழ்ந்தனர்.  அதன் பின் அந்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. அதன் பிறகு 98-வது ஓவர் நிறைவு பெரும் போது ரோஹித் சர்மா தனது டிக்ளரை உறுதி செய்தார்.

Leave a Comment